மலரே என்னிடம் மயங்காதே – 3

மனதும் அறிவும் பல நேரங்களில் ஒரே பாதையில் பயணிப்பதில்லை. எதிர் எதிர் திசையைத்தான் பெரும்பாலும் தேர்வு செய்கின்றன. மனம் சொல்வதை அறிவு மதிப்பதில்லை. அறிவு உரைப்பதை மனம் அலட்சியமே செய்கிறது. இரண்டுக்கும் இடையில் சிக்கி இழுபடும் நிலைதான் எனக்கும்..!! ‘இப்படியே இருக்கப் போகிறாயா.. சோகத்திலிருந்து மீண்டு வா..’ என என் அறிவு கிடந்து அலறினாலும், எனது மனம் கண்டு கொள்வதாயில்லை. கயலின் நினைவுகளை உதறவும் முயல்வதில்லை.

மலரும், பன்னீரும், அபியும்.. மனம் விட்டு சிரித்துக் கொண்டிருக்க.. எனக்குள்ளும் அந்த உற்சாகம் கொஞ்ச நேரம் உறைந்திருந்தது. பின்னர் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு என் அறைக்குள் நுழைந்தபோது, அத்தனை நேரம் காணாமல் போயிருந்த கயல்.. மனதுக்குள் வந்து அமர்ந்து கொண்டாள்.. கனமாக..!! கயலின் முகம் காணவேண்டும் என்று எனது கண்கள் துடித்தன.. அவளது குரல் கேட்கவேண்டும் என்று காதுகள் தவித்தன..!! ‘முகம் காண புகைப்படம் இருக்கிறது.. குரல் எப்படி..’ என்கிறீர்களா..?? சொல்கிறேன்..!!

எனக்கும் கயலுக்கும் கல்யாணம் நிச்சயமாயிருந்த சமயம். பன்னீருக்கே தெரியாமல் திருட்டுத்தனமாய் ஒருநாள் கயலை சென்று சந்தித்தேன். என்னைப் பார்த்து மிரண்டவளை சமாதானம் செய்து, வெளியே கூட்டி சென்றேன். ஒரு ரெஸ்டாரன்ட் சென்று சாப்பிட்டோம். அவள் கைகழுவ சென்ற கேப்பில்.. அவளது ஹேன்ட் பேக் திறந்து.. அவளுடைய செல்போனை எடுத்து.. எனது நம்பருக்கு மிஸ்ட் கால் கொடுத்து..!! அப்படித்தான் அவளுடைய செல்நம்பரை நான் அறிந்து கொண்டேன்..!!

“ஃபோன்லாம் பண்ணாதீங்க ப்ளீஸ்.. அப்பாக்கு தெரிஞ்சா ப்ராப்ளம்..” கயல் கெஞ்சினாள்.

“ப்ச்.. தெரிஞ்சாத்தான..? அதுலாம் ஒன்னும் தெரியாது.. அப்டியே ஒருவேளை தெரிஞ்சாலும்.. பன்னீர்ட்ட நான் பேசிக்கிறேன்.. நீ பயப்படாத..!! சரியா..??”

“ம்ம்.. சரி..!! ஆனா… “

“என்ன ஆனா..?”

“அடிக்கடிலாம் பண்ண வேணாம்..”

“அப்புறம்..?”

“நைட்டு வேணா பண்ணிக்கோங்க.. பத்து மணிக்கு மேல..!!”

“ம்ம்ம்.. சரி.. நைட்டே பண்றேன்..!! என் நம்பர் உன் மொபைல்ல.. டயல்ட் கால்ஸ்ல இருக்கும்.. நீ எப்போவாவது ஃப்ரீயா இருக்குறப்போ.. எங்கிட்ட பேசணும்னு தோணுச்சுனா கால் பண்ணு..” நான் சொல்லி முடிக்கும் முன்பே,

“ஐயையோ.. நான்லாம் பண்ண மாட்டேன்பா.. நீங்களே பண்ணுங்க..!!”

என்று பதறியவளை பார்க்கும்போது எனக்கு பரிதாபமாக இருந்தது. இவளை வைத்துக் கொண்டு நான் என்ன ரொமான்ஸ் செய்யப் போகிறேன் என்று ஏக்கமாக இருந்தது. ஆனால் அடுத்த நாள் மதியமே, ‘சும்மா..!! நீங்க சாப்டிங்களா இல்லையான்னு தெரிஞ்சுக்க கால் பண்ணினேன்.. வச்சிர்றேன்..’ என்று அவள் என் நம்பருக்கு கால் செய்து வழிந்தபோது.. இதை விட என்ன பெரிய ரொமான்ஸ் இருந்துவிட முடியும் என்று என் மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் படபடத்தன..!!

அப்புறம் எங்களுக்கு திருமணமாகி, கயல் என் வீட்டிற்கு வரும்வரை.. தினமும் இரவு.. செல்போன் சூட்டில் எங்கள் காதுகள் இரண்டும் சிவந்து.. திகுதிகுவென எரியும் வரை.. இருவரும் பேசுவோம்..!! நாங்கள் போனில் பேசிக் கொள்கிறோம் என்பது அப்புறம் பன்னீருக்கும், மலருக்கும் தெரிந்து போனது. ஆனால் அவ்வளவு நேரம் பேசுவோம் என்பது இன்றுவரை அவர்களுக்கு தெரியாது..!!

அப்படி ஒரு நாள் இருவரும் பேசிக்கொண்டதைத்தான், நான் கயலுக்கே தெரியாமல் ரெகார்ட் செய்து வைத்தேன். கல்யாணத்துக்கு அப்புறம் அதை அவளுக்கு போட்டுக் காட்டி, கிண்டல் செய்வேன். அவள் அதை டெலீட் செய்ய பலமுறை முயன்று தோற்றிருக்கிறாள்..!! ஒருவேளை அப்படி அவள் டெலீட் செய்திருந்தால்.. இப்போது நினைத்த போதெல்லாம் கயலின் குரலை கேட்கும் இன்பத்தை.. நிச்சயமாய் என் காதுகள் இழந்திருக்கும்..!!

அந்த ஒலிப்பதிவை நான் ஒரு MP3 கோப்பாக மாற்றி வைத்திருந்தேன். என்னுடைய கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பிலேயே போட்டு வைத்திருந்தேன். இப்போது அதைத்தான் அமர்ந்து கேட்க ஆரம்பித்தேன். காதுகளுக்கு ஹெட்ஃபோன் கொடுத்துவிட்டு.. கண்களை இமைகளால் போர்த்திவிட்டு.. கம்ப்யூடர் சேரில் வசதியாய் தலையை சாய்த்துவிட்டு..!!

“ம்ம்.. சொல்லுங்க..”

“ஹேய்.. என்னாச்சு.. கட் பண்ணிட்டு போயிட்ட..?”

“அப்பா கூப்பிட்டாரு.. அதான்..”

“பன்னீர் இன்னும் தூங்கலையா..?”

“ம்ஹூம்..!! அப்பாவும், பொண்ணும் இன்னும் அரட்டை அடிச்சுட்டுதான் கெடக்குதுங்க.!!”

“ஓ..!! மலரும் முழிச்சிருக்காளா..?”

“ஆமாம்.. அந்த குட்டி சாத்தானுந்தான்..!! என்னைக்கும் சீக்கிரம் தூங்கிடுங்க.. இன்னைக்குன்னு பார்த்து ரெண்டும் கொட்ட கொட்ட முழிச்சுட்டு உக்காந்துக்கிட்டு.. நம்ம உசுரை வாங்குதுங்க..!!”

“ஹ்ஹாஹ்ஹா…!! ம்ம்ம்.. கொஞ்சம் மலர்ட்ட ஃபோனை கொடேன்..!!”

“எதுக்கு..??”

“சும்மாதான்..”

“ப்ச்.. எதுக்குன்னு சொல்லுங்க..”

“என்ன நீ.. நானும் என் மச்சினியும் ஏதாவது ஜாலியா பேசிக்குவோம்.. உனக்கு என்ன..? போய் ஃபோனை கொடு.. போ..!!”

“ஓஹோ.. ஐயாவுக்கு ஜாலியா பேசணுமோ..? உதை விழும்..!!”

“ஹ்ஹாஹ்ஹா…!! ஹேய்.. ப்ளீஸ்டி…”

“சும்மா இருங்கப்பா.. அவகிட்ட என்ன ஜாலிப்பேச்சு உங்களுக்கு..??? அதெல்லாம் ஒன்னும் வேணாம்..!!!”

“ஏய்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..”

“ப்ச்..!! அப்புறம்.. நான் ஃபோனை கட் பண்ணிட்டு போயிடுவேன்..!!”

“ஏய்.. ஏய்.. இரு இரு.. கட் பண்ணிடாத..!! நான் சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன்.. உன்னை சீண்டிப் பாக்கலாம்னு..!!”

“ம்.. ம்.. சும்மா சொல்லாதீங்க.. எனக்கும் தெரியும்..”

“என்ன தெரியும்..?”

“ம்ம்ம்..?? நீங்க என் தங்கச்சியை சைட் அடிக்கிறது… அவ கிட்ட ஜொள்ளு வுடுறது..”

“அடிப்பாவி..!! ம்ம்ம்ம்… இப்போத்தான் உண்மைலாம் வெளில வருது..!!”

“என்ன உண்மை..?”

“நான் இத்தனை நாளா சாதாரணமா உன் தங்கச்சிட்ட பேசுறதை.. சந்தேக கண்ணோட பாத்துட்டு இருந்திருக்குற நீ..!! நான் ஒன்னும் அந்த மாதிரி கிடையாதும்மா..!! பக்கா டீசன்ட்..!!”

“ம்ம்ம்.. நம்பிட்டேன் நம்பிட்டேன்..!!”

“ஹ்ஹாஹ்ஹா…!! ம்ம்ம்… அப்புறம்..??”

“………………………”

“ஹேய்.. என்ன சத்தத்தையே காணோம்..?? கோவமா..??”

“அதெல்லாம் ஒண்ணுல்ல.. தூக்கம் வருது..”

“அதுக்குள்ளையா..?”

“ம்ம்ம்…!! உங்களுக்கு தூக்கம் வரலையா..?”

“ம்ஹூம்..”

“போய் தூங்குங்கப்பா.. டைமாச்சு.. காலைல ஆபீஸ் வேற போகனும்ல ..?”

“தூக்கம் வரலையே.. என்ன பண்ண சொல்ற..?”

“பெட்ல போய் படுத்துக்கிட்டு.. கண்ணை இறுக்க்க்க்கி மூடிக்குங்க.. தூக்கம் தானா வரும்..!!”

“பெட்லதான் படுத்திருக்கேன்.. கண்ணை கூட மூடிக்கிட்டேன்.. தூக்கம்தான் வரல..!!”

“ஓ..!! அப்போ என்ன பண்ணலாம்..?”

“சரி.. நீ அந்த பாட்டு பாடு.. நான் கேட்டுக்கிட்டே தூங்குறேன்..”

“எந்த பாட்டு..?”

“அதான்.. அன்னைக்கு பாடுனியே.. P.சுசீலா பாட்டு..”

“ஓ.. அதுவா..?? ம்ம்ம்.. சரி.. பாடுறேன்.. அப்டியே கேட்டுட்டு தூங்கிடனும்.. என்ன..?”

“ம்ம்.. சரி..!!”

Share This

You must have at least 18 years old to visit our website. We are against child pornography. If you see anything that is related to it, please contact us

Screw Driver

காதல் கொஞ்சம்.. காமம் கொஞ்சம்..

You may also like...

Leave a Reply


Online porn video at mobile phone