என் மேல் விழுந்த மழைத்துளி! – 1
இதை பார்த்துக்கொண்டிருந்த கோபி வேகமாக ஓடிச்சென்று, என் அம்மாவை அழைக்க சென்றான்.
உடனே அம்மாவும் அதிர்ச்சியுடன் ஓடி வந்தார்கள்.
“என்னாச்சுடா ? எப்படி இது நடந்துச்சுடா ?” என பதறினார்கள்.
அம்மாவிடம் காவ்யாவின் தந்தை நடந்த சம்பவத்தை கூடி மன்னிப்பு கேட்டார். மருத்துவமனை சென்றால் குணமாகிவிடும் என்றும் கூறினார்.
உடனே எல்லோரும் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
கூடவே காவ்யாவும் அழுதுக்கொண்டே வந்தாள்.
“ஏன்பா இப்படி ஆச்சு பாத்து ஒட்டிருக்க கூடாதா” என்றாள்.
காவ்யாவை அவளது தந்தை சமாதானம் செய்துக்கொண்டே வந்தார்.
டாக்டர் எனக்கு கட்டு போட்டு ஒரு வாரம் ஒய்வு எடுத்தால் சரியாகிவிடும் என்றார்.
பின்பு காவ்யாவும், அவளது தந்தையும் எங்களை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
அவளது தந்தை, என்னுடைய அம்மாவிடம் பலமுறை மன்னிப்பு கேட்டார்.
அதெல்லாம் பரவாயில்லை, அவனுக்கு சரியாகிவிடும் என்று அவரை மன்னித்தார்கள்.
அப்போது காவ்யா தன் தந்தையிடம், “அப்பா இந்த ஒன் வீக், கை சரி ஆகுற வரைக்கும் டெய்லி ஈவினிங் வந்து நாம் பாத்துட்டு போகணும்” என்றாள்.
அவளது தந்தையும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
தினமும் அவளது தந்தையுடனோ அல்லது தாயுடனோ மாலையில் என்னை பார்க்க வந்து விடுவாள். எனக்கு பெண்களுடன் பேசுவதற்கு கூச்சம் இருந்த காரணத்தினால், அவளிடம் நானாக சென்று பேச முற்பட்டதில்லை.
அவளாக வந்து “கை எப்படி இருக்கு ?” என்று கேட்பாள். நான் பரவாயில்லை என்று ஒற்றை வார்த்தையில் பதில் கூறிவிட்டு அமைதியாகி விடுவேன்.
அதன்பின் அவள் சென்று என் அம்மாவுடன் பேசி கொண்டிருப்பாள். என் அம்மாவும் அவளுடன் நன்றாக பழகினாள்.
இப்படியே ஒரு வாரம் சென்றது, அதன் பின் என்னுடைய கை குணம் அடைந்தது.
பின்பு அவள் எப்போதேனும் நேரம் கிடைக்கும்போது எங்கள் வீட்டிற்கு வந்து என்னை பார்த்துவிட்டு, அம்மாவுடன் பேசி செல்வாள். அந்த நேரங்களிலும் நான் சரியாக பேசியதில்லை.
ஒருநாள் அவர்கள் குடும்பத்துடன் எங்கள் வீட்டிற்கு வந்தனர்.
நாங்கள் இந்த ஊரில் உள்ள வேறு பகுதிக்கு செல்கிறோம். நேரம் கிடைக்கும்போது வீட்டிற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்று கூறினார்கள்.
அப்போது காவ்யா கொஞ்சம் சோகத்துடன், “நான் போயிட்டு வரேன் ஆண்ட்டி, பை அசோக்” என்று கூறியவாறு எங்களை விடைபெற்றாள்.
சில நாட்களுக்கு பின் காவ்யா வீட்டிற்கு சென்று வரலாமா என்று அம்மா என்னை அழைத்தார்கள்.
எனக்கு இருந்த கூச்சத்தினால், “இல்ல வேணாம் இன்னொரு நாள் போகலாம்” என்று தட்டிக்கழித்தேன்.
அதன் பின் அம்மா என்னிடம் எதுவும் கேட்கவில்லை. நானும் அதை அப்படியே மறந்துவிட்டேன்.
இன்று பார்த்தால் என் கண் முன்னே அந்த காவ்யாவே வந்து அமர்ந்திருக்கிறாள்.
எனக்கு என்ன பேசுவது என்றே புரியவில்லை. ஏதோ வாயில் வந்ததை உளறினேன்.
“காவ்யா அது நீதானா. அப்போ நீ ரொம்ப ஒல்லியா இருந்தே. இப்ப கொஞ்சம் குண்டா இருக்கே. எனக்கு அடையாளமே தெரியலையே” என்று சிரித்தேன்.
“டேய் நான் குண்டாவா இருக்கேன்” என்று முறைத்தாள்.
“இல்ல கொஞ்சம் வெயிட் போட்டு அழகாதான் இருக்குறே ” என்று சிரித்தேன்.
“ஹ்ம்ம் அப்படிவா வழிக்கு. ஆனா நீ அப்படியேதான்டா இருக்கே. என்ன கொஞ்சம் மீசை தாடி எல்லாம் வந்துருச்சு அதான் கொஞ்சம் அடையாளம் தெரியல. இருந்தாலும் கண்டுபிச்சுட்டேன் பாத்தியா” என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.
நான் எதுவும் பேசாமல் அமைதியாக புன்னகைத்தேன்.
அருகில் இருந்த மலர் மற்றும் தேன்மொழியிடம், “இவன் சரியான தொடை நடுங்கிடி நான் போயி பேசுனாலும் இவன் பேசமாட்டான். இன்னும் எதாச்சும் பேசுனா அழுதுடுவானோன்னு பயந்து போனாபோகுதுன்னு நானும் இவன விட்டுட்டு அவங்க அம்மாகிட்ட போயி பேசிட்டு இருப்பேன்” என்றாள்.
இப்போதுதான் காவ்யாவை நன்றாக பார்த்தேன். மஞ்சள் நிற மேனியில் கொஞ்சம் சதைபிடிப்புடன் அழகாக இருந்தாள்.
அப்போது தற்செயலாக தேன்மொழியின் முகத்தை கவனித்தேன்.
அவளது முகம் வாடிப்போன ரோஜாவைபோல் காணப்பட்டது.
“இந்த காவ்யா இவ முன்னாடிதான் எல்லாத்தையும் பேசணுமா. என்னைய தனியா கூப்பிட்டு கேட்டுருக்க கூடாதா. ச்சே இனிமே தேன்மொழி கூட சகஜமா பழக முடியாம போயிருமோ” என்று பயந்தேன்.
அதன் பிறகு காவ்யா என் கையை பிடித்து, “இப்போ கையெல்லாம் சரியா இருக்கா ? திரும்ப எதுவும் வலியெல்லாம் இல்லையே” என்று அன்பாக விசாரித்தாள்.
இப்பொழுது தேன்மொழியின் கண்களை பார்க்க வேண்டுமே அது வெள்ளத்தை அடைத்து வைத்து எப்போது வெளியேற்ற போகிறோம் என்று துடித்து கொண்டிருக்கும் ஒரு அணையை போன்று இருந்தது.
தேன்மொழி எப்போது வேண்டுமானாலும் அழுது விடுவாள் என்பது எனக்கு புரிந்தது. இப்போதே காவ்யாவின் செயலை நிறுத்த வேண்டும் என்று தோன்றியது.
அந்த நேரம் சரியாக பாலாவும், முத்துவும் வந்தனர்.
“டேய் அசோக் இன்னுமா நீ சாப்பிடல, இன்னும் கொஞ்ச நேரத்துல கிளாஸ் ஆரம்பிக்க போகுதுடா” பாலாதான் சொன்னான்.
நான் இதுதான் சமயம் என்று என் கையை காவ்யாவிடம் இருந்து விடுவித்துவிட்டு “இங்க வாங்கடா” என்றேன்.
இருவரையும் காவ்யா, மலர் மற்றும் தேன்மொழிக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.
அவர்களும் சிரித்த முகத்துடன் பேசிக்கொண்டிருந்தனர்.
“சரி சரி வேகமா சாப்பிடுங்க” என்று முத்து கூறினான்
அனைவரும் வேகமாக சாப்பிட்டோம், தேன்மொழி எதுவும் பேசாமல் தலையை குனிந்துக்கொண்டு சாப்பிட்டாள்.
அதன்பின் முத்துவும் பாலாவும் அவர்களுடைய இடத்தில் சென்று அமர்ந்தனர்.
காவ்யா சிரித்த முகத்துடன் காணப்பட்டாள். அப்போது பாலாவின் பார்வையை கவனித்தேன் ஒரு சிறு புன்னகையுடன் மலரை பார்த்துக்கொண்டு இருந்தான். பதிலுக்கு மலரும் அவனை பார்த்து புன்னகைத்தாள்.
மதிய வகுப்பிற்கு நேரம் ஆகிவிட்டதால், நான் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
பின்பு அனைவரும் வேகமாக சாப்பிட்டுவிட்டு அவரவர் இடத்தில் அமர்ந்தோம். வகுப்புகள் ஆரம்பித்ததும் தேன்மொழியின் பக்கம் திரும்பவேயில்லை.
முன்பு தேன்மொழியை மட்டும்தான் எனக்கு தெரியும். இப்போது காவ்யாவும் எனக்கு நெருக்கமாகிவிட்டாள்.
இப்போது யாரை பார்த்தாலும் நமக்குதான் பிரச்சனை என்று வகுப்பை கவனிக்க ஆரம்பித்தேன். மாலை வகுப்புகள் நிறைவடைந்தது.
முத்து, பாலா வழக்கம்போல் என்னை விடைபெற்றனர்.
இப்போதுதான் அந்த பக்கம் பார்த்தேன்.
தேன்மொழி தனது பையில் எதையோ தேடிக்கொண்டிருந்தாள்.
மலர் கிளம்பிவிட்டாள். காவ்யா மட்டும் என்னை நோக்கி நடந்து அருகில் வந்தாள்.
“அசோக், அப்பா வந்துருவாங்க நான் கிளம்பனும் உன்னோட நம்பர் குடு நான். வீட்டுக்கு போனதும் முடுஞ்சா பேசுறேன்” என்றாள்.
உடனே எனக்கு திடுக்கிட்டது, என்னிடம் இதுவரை எந்த பெண்ணும் தொலைபேசி எண் கேட்டதில்லை. நானாக சென்றும் எவருக்கும் கொடுத்ததில்லை. என்னிடம் மொபைல் இல்லை என்று சொல்லிவிடலாமா என்று நினைத்தேன். ஆனால் என்றாவது ஒருநாள் என்னிடம் மொபைல் இருப்பதை அவள் கண்டுப்பிடித்துவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தேன்.
சரி காவ்யாதானே என்னுடைய எண்னை கேட்கிறாள். நான் சென்று அவளிடம் கேட்கவில்லையே. அதனால் தேன்மொழி எதுவும் நினைக்கமாட்டாள் என்று ஒரு மனதாக மொபைல் எண்னை கூற ஆரம்பித்தேன்.
அதை கூறிக்கொண்டே தேன்மொழியை பார்த்தேன். அவள் நான் கூறுவதை எதுவும் கவனிக்காமல் அவளது பையில் சில புத்தகைத்தை அடுக்கிக்கொண்டிருந்தாள்.
என்னுடைய எண்னை காவ்யா குறித்து கொண்டு, சிரித்த முகத்துடன் ”பை அசோக், பை தேன்மொழி” என்று சொல்லியவாறு வகுப்பறையைவிட்டு வெளியேறினாள்.
இப்போது நான் தேன்மொழியை பார்த்தேன். அவளும் கிளம்ப தயாரானாள்.
“என்ன தேன்மொழி கிளம்பிட்டியா ?”
அவளிடம் இருந்து “ஹ்ம்ம்…” என்று ஒற்றை வார்த்தையில் மட்டுமே பதில் வந்தது.
எனக்கு எதுவும் பேசத்தெரியாமல் “வா போகலாம்” என்று அழைத்தேன். அவளும் பேசாமல் எழுந்தாள்.
இருவரும் ஒரு மனதாக அறையைவிட்டு வெளியே வந்தோம்.
அப்போது காவ்யா என்னை நோக்கி வேகமாக ஓடி வந்தாள்.
“அசோக் உன்னைய அப்பா பாக்கணும்னு கூப்பிடுறாங்க” என் பதிலைகூட எதிர் பார்க்காமல் “வா போகலாம்” என்று சொல்லிவிட்டு என் கையை பிடித்து இழுத்துச்சென்றாள்.
நான் தேன்மொழியை பார்த்துக்கொண்டே, காவ்யா இழுத்த திசையை நோக்கி சென்றுக்கொண்டிருந்தேன்.
அங்கே தேன்மொழி என்ன செய்வது என்று புரியாமல் என்னை பார்த்துக்கொண்டே மெதுவாக நடந்து சென்றாள்.
இங்கே காவ்யாவின் தந்தை “ஏன் இத்தனை வருசமா எங்க வீட்டுக்கே வரல ? எங்களையெல்லாம் மறந்துட்டியா அசோக்?” எனக் கேட்டார்.
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல அங்கிள்” என்று சமாளித்தேன்.
“சரி கம்மிங் சண்டே, நீ கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரணும்” என்று அன்புக்கட்டளையிட்டார்.
“ஓகே அங்கிள் கண்டிப்பா வரேன்” என்று பதில் கூறிவிட்டு தேன்மொழி எங்கே இருக்கிறாள் என திரும்பி பார்த்தேன்.
அவளுடைய கார் வந்திருந்தது. அதில் அவள் ஏறி அமர்ந்துக்கொண்டதும் கார் மெதுவாக நகர்ந்தது.
நான் காரின் ஜன்னல் வழியாக தேன்மொழியின் முகத்தை பார்த்தேன்.
தேன்மொழி தனது கைகுட்டையால் கண்களை துடைத்துக்கொண்டு முகத்தை என் பக்கம் திருப்பாமல் சென்றாள்.
ஒரு வழியாக காவ்யா மற்றும் அவளது தந்தையை விடைபெற்று வீட்டிற்கு கிளம்பினேன்.
இப்போது எனக்கு இதயமே வெடித்துவிடுவதுபோல் இருந்தது.
தேன்மொழி என்னை பற்றி என்ன நினைத்துக்கொண்டு இருப்பாள். அவள் ஏற்கனவே எப்போதாவதுதான் சிரிப்பாள். காவ்யாவின் இந்த செயலுக்கு பிறகு என்னிடம் பேசுவாளா இல்லை வெறுத்து ஒதுக்கி விடுவாளா என்று புரியாமல் தவித்தேன்.
தேன்மொழி இருக்கும்போது காவ்யா அப்படி செய்ததை நினைத்து கொஞ்சம் கோபம் வந்தது. இருந்தாலும் காவ்யாவை திட்டவேண்டும் என்ற எண்ணம் எனக்கு வரவில்லை.
ஏனென்றால், நான் யாரென்றே தெரியாமல் இருந்த சமயத்தில் எனக்கு அடிப்பட்டவுடன் அழுது துடித்திருக்கிறாள். அன்று அவள் என்மீது காட்டிய அன்பு இன்றைக்குதான் என்னுடைய மனதை ஆழமாக பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்தேன்.
இவ்வாறு யோசித்துக்கொண்டு ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன்.
அம்மாவிடம் காவ்யா என்னுடைய வகுப்பில் படிக்கிறாள் என்பதையும்அவளது தந்தையை சந்தித்தது பற்றியும் கூறினேன்.
“ரொம்ப நல்லதுடா, நான் எத்தனை தடவ போகலாம்னு உன்னைய கூப்பிட்டுருப்பேன். நீ வரவே மாட்டேன்னு அடம்பிடிச்சே. ஆனா இப்போ பாத்தியா அவங்களே நீயே திரும்ப சந்திக்கிற மாதிரி ஆகிருச்சு. அதனால ஒழுங்கா அவங்க வீட்டுக்கு இந்த வாரம் போயிட்டு வாடா” என்றார்கள்.
நான் எந்த மறுப்பும் சொல்லாமல் சரி என்று மட்டும் பதில் கூறிவிட்டு அமைதியா இருந்துவிட்டேன்.
இரவு தூங்கும்போது தேன்மொழி மற்றும் காவ்யாவின் நினைவுகள் என்னை மேலும் வாட்டி வதைத்தது.
இனிமேல் நம்மால் இதையெல்லாம் தனி ஆளாக இருந்து சமாளிக்க முடியாது. நடந்த எல்லாவற்றையும் கோபியிடம் கூடிய சீக்கிரம் சொல்லிவிட வேண்டும் என்று முடிவுசெய்தேன்.
அப்போது என்னுடைய மொபைல் ஒலித்தது.
ஒரு புதிய எண்னில் இருந்து அழைப்பு வந்தது.
“ஐயோ, காவ்யாவாதான் இருக்கும். எதுக்கு இந்த நேரத்துல கால் பண்ணுறா” என்று பயந்துக்கொண்டே எடுத்தேன்.
மெதுவாக “ஹலோ” என்றேன்.
எந்த பதிலும் இல்லை, ஒரே அமைதியாக இருந்தது.
அதனால் கொஞ்சம் தைரியத்துடன் பேசினேன்.
“ஹே… காவ்யா போன் பண்ணிட்டு எதுக்காக பேசாம இருக்குறே ? அதுவும் இந்த நேரத்துல எதுக்கு கால் பண்ணுறே” என்று கேட்டவுடன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்தநேரத்தில் கால் செய்தது யாராக இருக்கும் என்று எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
இப்போதுதான் எவருடைய எண்ணாக இருந்தாலும், இணையத்தில் அதைவைத்து அவர்களது பெயரை எளிதாக கண்டுபிடித்துவிடலாமே என்று யோசனையுடன் தேடினேன்.
அதில் தேன்மொழி என்ற பெயர் வந்தது.
நான் அதைப்பார்த்து அதிர்ந்தே போனேன்.
இவளுக்கு எப்படி என்னுடைய எண் தெரியும் ? இவள்தான் குறித்து வைக்கவில்லையே என்று நினைத்தேன்.
ஆனால் என்னுடைய எண்ணை அவளது மனதில் குறித்து வைத்துக்கொண்டாள் என்பதை நொடிப்பொழுதில் புரிந்துக்கொண்டேன்.
இப்போது அவளுக்கு கால் செய்யலாமா இல்லை வேண்டாமா எனது மனம் துடித்தது.
கடைசியில் ஒரு மனதாக மொபைலை எடுத்த்து அவளை அழைத்தேன்.
உடனே அவள் போனை எடுத்தாள்.
இந்தமுறையும் அவள் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்.
“ஹே…தேன்மொழி ப்ளீஸ் பேசு” என்றதும் அவள் தொடர்ந்தாள்.
“ஓ… யாருன்னு கரெக்டா கண்டுபிடிச்சுடியே. யு ஆர் ரியலி க்ரேட் அசோக்” குரலில் சுரத்தை இல்லாமல் பேசினாள்.
“தேன்மொழி உனக்கு என்னதான் ஆச்சு, ஏன் இப்படி சோகமாவே இருக்கே ? காவ்யா வந்து அப்படி பேசுனது உனக்கு கோவமா ?”
“அவ உன்னோட ப்ரெண்ட். அதுக்காகபோயி கோவப்படுறதுக்கு எனக்கு என்ன உரிமை இருக்கு ?”
“தேன்மொழி எதுக்கு இப்படியெல்லாம் பேசுறே. என்னதான் காவ்யாவ எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தாலும். ஃபர்ஸ்ட் டைம் உன்கூடதான் ஃப்ரெண்டா பழக்கணுங்குற ஆசையே வந்துச்சு தெரியுமா ?
“ஓ அப்படியா !”
You must have at least 18 years old to visit our website. We are against child pornography. If you see anything that is related to it, please contact us
Very nice , please continue
Super continue
Excellent continue…
அட தாயோலி எல்லா கதைக்கும் அப்டேட்ஸ் பண்றா
Bro en mel viluntha panithuli update pannumga