என் மேல் விழுந்த மழைத்துளி! – 1

நான் வகுப்பறையில் நுழைவதற்கும், பிரபா அவளுடைய பேக்கை எடுத்துக்கொண்டு வெளியில் வருவதற்கும் சரியாக இருந்தது.
அவள் எதுவும் பேசாமல் அவளது முகபாவனைகள் மூலமாகவே நூலகம் செல்வதாக கூறிவிட்டு சென்றாள். நான் உள்ளே சென்று என்னுடைய பேக்கை எடுத்துக்கொண்டு திரும்பும் வேளையில் பாலா, முத்து மற்றும் அந்த மூன்று பெண்களும் வகுப்பிற்குள் நுழைந்தனர்.
நான் என்ன செய்வது என்று புரியாமல் என்னுடைய இடத்திலேயே நின்றுக்கொண்டு இருந்தேன்.
“மச்சி, நீ இங்கதான் இருக்கியா ?” என்ற கேள்வியுடன் முத்து என்னிடம் வேகமாக ஓடி வந்தான்.
அதே சமயம் “என்ன அசோக், நீ எதுவும் ஈவண்ட் பத்தி திங் பண்ணியா ?” பாலாவும் கேள்வியுடன் வந்தான்.
“ஒரு காம்படீசன்ல ஜாயின் பண்ணலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன் பட் இன்னும் ஃபைனல் டிசிஷன் எடுக்கலடா பாலா”
“என்ன காம்படீசன் மச்சி ?” முத்து கேட்டான்.
“இதெல்லாம் எதுக்குதான் தெண்டத்துக்கு இருக்குதோ ?” காவ்யா என் காதில் விழுவதுபோல் சொல்லிவிட்டு என்னை கடந்து சென்றாள்.
எனக்கு அப்படியே சுர்ரென்று கோபம் பொங்கி எழுந்தது. ஆனால் தவறு என்மீது இருப்பதால் எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு பேசினேன்.
“அது வந்து, செஸ் போட்டில சேரலாம்னு இருக்கேன்டா”
“சூப்பர் மச்சி நல்ல முடிவுடா, கையகுடு” என்று முத்து வாழ்த்தினான்.
“நல்லது அசோக், சீக்கிரம் ஸார்கிட்ட நேம் கொடுத்துடு” என்றான் பாலா.
“அப்படியே மனசுல பெரிய கிராண்ட்மாஸ்டர்னு நினைப்பு, செஸ் விளையாடுற மூஞ்சிய பாரு” மீண்டும் காவ்யாதான் சொன்னாள்.
அதைகேட்டு தேன்மொழியும் மலரும் விழுந்து விழுந்து சிரிக்கும் சப்தம் என்னுடைய காதில் நன்றாக கேட்டது.
பாலாவும் முத்துவும் என்ன பேசுவது என்று புரியாமல் திகைத்து நின்றனர்.
எனக்கு காவ்யாவை இழுத்து அவளது கன்னத்தில் சப்பென்று அறைய வேண்டும் போல் இருந்தது. ஆனால் நம் மீது அவப்பெயர் இருக்கும்வரை என்ன செய்ய முடியும், அதனால் மீண்டும் என்னுடைய கோபத்தை முழுவதுமாக கட்டுப்படுத்திக்கொண்டு அங்கேயே நின்றேன்.
“நாம எதுக்குடி இங்க இருக்கணும், வாங்கடி வீட்டுக்கு போலாம்” என்று தேன்மொழியையும் மலரையும் அவள் அழைத்துக்கொண்டு வெளியில் செல்லத்தொடங்கினாள்.
“பை பாலா, பை முத்து” அந்த மூன்று பெண்களும் என் நண்பர்களை பார்த்து சொல்லிவிட்டு வகுப்பறையிலிருந்து கிளம்பி சென்றனர்.
“காவ்யா எப்படி பேசுறான்னு பாத்தியா மச்சி, என்னால தாங்க முடியலடா” என்று துடித்தேன்.
“டேய் அசோக் அவள விட்டுதள்ளுடா, நீ ஒழுங்கா எப்பவும்போல அமைதியா இரு, கூடிய சீக்கிரம் நல்லது நடக்கும்” என முத்து ஆறுதல் கூறினான்.
“சரி மச்சி, இப்போ அதப்பத்தி பேச வேணாம், உங்க டிராமா எப்படி போகுது ஸ்டோரியெல்லாம் ரெடி ஆகிருச்சா ?”
“ஹ்ம்ம், ஃபுல் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணியாச்சு, நாளைல இருந்து பிராக்டிஸ் பண்ண போறோம்” என்று பாலா பெருமையாக சொன்னான்.
“ஓ… க்ரேட் மச்சி, அது எந்த மாதிரி டிராமாடா ?”
“ஃபேமிலி டிராமா மச்சி”
“நைஸ், என்ன ஸ்டோரின்னு சொல்ல முடியுமா ?”
நான் அப்படிக்கேட்டதும் பாலாவும் முத்துவும் சுற்றிமுற்றி வகுப்பறையை பார்த்தனர். வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களும் சென்றுவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு பாலா பேச ஆரம்பித்தான்.
“ஹ்ம்ம்… சொல்றேன் மச்சி, யார்கிட்டயும் சொல்லிடாதடா”
“என்னடா ரொம்ப சீக்ரேட்டான ஸ்டோரியா, இப்படியெல்லாம் சொல்றீங்க ?”
“டிராமா நடக்குற வரைக்கும், கதை வெளிய போயிடக்கூடாது. அப்புறம் வேற யாராவது ஸ்டூடண்ட்ஸ் காப்பி அடிச்சுட்டா என்ன பண்றது மச்சி”
“டேய் முத்து என்னடா இவ்வளவு புதிர் போடுறீங்க, அப்படி என்ன ஸ்டோரிடா அது ? எனக்கு இப்பவே கேக்கணும் போல இருக்குது, பிளீஸ் சொல்லுங்கடா ” என ஆர்வம் அடைந்தேன்.
“பொறுமையா இரு மச்சி சொல்றேன், ஒரு வீட்ல இருக்குற ரொம்ப கண்டிப்பான அம்மாவுக்கு ஒரு பொண்ணு இருக்குறா. அந்த பொண்ணு ஒருத்தன லவ் பண்ணுறா. ஆனா அந்த அம்மா ஒரு பணக்கார பையனுக்குதான் தன்னோட பொண்ண கட்டிக்கொடுப்பேன்னு திமிருல அலையுறா. கடைசியில அந்த அம்மாவோட திமிர அந்த லவ் பண்ற பையனே அடக்கி தன்னோட காதலியவே கல்யாணம் பண்ணிக்குறான். அதோட சுபம் போட்டு டிராமாவ முடிக்கிறோம்” ஒரே மூச்சில் பாலா அனைத்தையும் சொல்லி முடித்தான்.
“ஸ்டோரி நல்லாதான் இருக்குது பட் இந்த கதைய எங்கயோ கேட்ட மாதிரி இருக்குடா”
“இது நானா யோசிச்சு பண்ணதுடா, என் மேல சந்தேகப்படுறியா, டேய் முத்து என்னடா பேசாம இருக்குறே. நான்தான் ஸ்டோரி ரெடி பண்ணேன்னு எடுத்து சொல்லுடா” என்று துடித்தான்.
“மச்சி இது இவனே ரெடி பண்ணதுடா, நம்பு மச்சி” என முத்து சப்போர்ட் செய்தான்.
நான் அதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். திடீரென்று என்னுடைய மூளையில் ஒரு பொறி தட்டியது.
“டேய் கண்டுபிச்சுட்டேன், இது மாப்பிளை படத்தோட கதைதானே யாரடா ஏமாத்த பாக்குறீங்க?” என்று முறைத்தேன்.
இப்போது இருவருக்கும் பேச்சு வராமல் போனது. ஆனால் முத்து மட்டும் என்னிடம் பேசுவதற்கு முயற்சித்தான்.
“நீ கண்டுபிடிச்சுடுவேன்னு எனக்கு அப்போவே தெரியும் மச்சி, பாலாதான் சமாளிக்க பாத்தான்” என்று சொல்லி பாலாவை பார்த்து சிரித்தான்.
“ஆமா நான் அந்த கதையதான் சுட்டுட்டேன், கத்தி சொல்லி யார்கிட்டயும் காட்டி கொடுத்துடாதீங்கடா” என்று பாலா கெஞ்சினான்.
“கவலப்படாத மச்சி, யாருக்கும் தெரியாம சீக்ரெட்டா வச்சுக்குறேன், உங்க டிராமல யார்யார்க்கு என்னென்ன கேரக்டர்டா”
“திமிரு பிடிச்ச அந்த அம்மா கேரக்டர் காவ்யா பண்ணுறா, பொண்ணு கேரக்டர் மலர் பண்ணுறா” என்றான் முத்து.
“அந்த லவ் பண்ணுற பையன் கேரக்டர் பாலா பண்ணுறான ?” என்று நான் கேட்டேன்.
“மச்சி உனக்கு எப்படிடா தெரியும் ?” பாலா குழப்பமடைந்தான்.
“இத கண்டுபிடிக்க சிபிஐல இருந்து ஆபிசரா வருவாங்க. உன்னய பத்தி எனக்கு தெரியாது. சைலன்டா உங்கலோட லவ் ஸ்டோரிய டிராமவா போடுறீங்க. அதானே ?”
“ஆமா மச்சி” என்று முத்து இளித்தான். பாலா குட்டு வெளிப்பட்டது தெரிந்ததும் எதுவும் பேசமுடியாமல் சிரித்து சமாளித்தான்.
“ஹ்ம்ம்… எப்படியோ நல்லா பண்ணா செரி, இன்னும் வேற என்ன கேரக்டர்ஸ் இருக்குடா ?”
“நான் அந்த பணக்கார பையனாவும், தேன்மொழி எனக்கு அம்மாவாவும் நடிக்கிறோம்” என்று முத்து சொன்னான்.
“சூப்பர்டா, எல்லாரும் நல்லா பண்ணுங்க, எனக்கு ஒரே ஒரு கேரக்டர் மட்டும் அதுல தர முடியுமா ?” என்று கேட்டேன்.
“என்ன மச்சி சொல்றே ?” இருவருமே அதிர்ச்சியுடன் கேட்டனர்.
“இல்ல காவ்யாவுக்கு திமிரு பிடிச்ச கேரக்டர் கொடுத்துருக்கீங்க, அந்த கேரக்டர் ரொம்ப ஓவரா பண்ணும்போது அவள பளார்னு அறையிர மாதிரி ஒரு ஸீன் வைக்கிறீங்களா ?, நான் அதுல நடிக்கிறேன்”
“டேய் மச்சி என்னடா லூசு மாதிரி பேசுறே, இருக்குற பிரச்சனையெல்லாம் பத்ததா” முத்து திணறினான்.
“பின்னே என்ன மச்சி தேன்மொழியும் மலரும் சும்மாவே இருந்தாலும், இந்த காவ்யா வேணும்னே பேசி என்னைய கஷ்டப்படுத்துறா, அந்த கோவத்துலதான் அப்படி கேட்டுட்டேன்”
“அசோக், நீ அதபத்தியெல்லாம் நினைக்காம, ஒழுங்கா செஸ்ல கான்சென்ட்ரெட் பண்ணுடா”என்று பாலா அறிவுரை வழங்கினான்.
உடனே எனக்கு பிரபாவின் நினைவு வந்தது. அவள் நூலகத்தில் இருப்பதை மறந்தே போயிவிட்டேனே, இனி காவ்யாவை பற்றி பேசி எந்த பலனும் இல்லை. அதனால் அந்த கோபத்தை விட்டுவிட்டு பிரபாவை பற்றி இவர்களிடம் கூறலாம் என்று பேச ஆரம்பித்தேன்.
“ஓகே மச்சி, உங்ககிட்ட ஒண்ணு சொல்லவே மறந்துட்டேன். எனக்கு ஒரு புது ஃப்ரெண்ட் கிடைச்சுருக்காங்க”
“என்ன ஃப்ரெண்டா யாருடா அது ?” முத்துதான் கேட்டான்.
“நம்ம கிளாஸ்தான் மச்சி, அவங்க பேரு பிரபாவதி”
“என்னடா மரியாதையெல்லாம் ரொம்ப பலமா இருக்கு, எப்படிடா உனக்கு பழக்கம்” பாலா கொஞ்சம் கேலியாக கேட்டான்.
“இனி பொண்ணுங்கக்கூட மரியாதையாதான் பேசணும்னு நினைக்குறேன். அதான் அப்படி சொல்றேன். அவங்க எங்க ஏரியாதான். மதியம் நீங்க போனதுக்கு அப்புறம் நான் கிளாஸ் வந்ததும் அவங்களே வந்து என்னைய பாத்து பேச வந்தாங்கடா. பேசுனதுல அவங்க ரொம்ப நல்ல டைப்னு தெரிஞ்சுது, உடனே ரெண்டு பேருமே ஃபிரண்ட்ஸ் ஆகிட்டோம்”
“அசோக் புதுசா வந்த பொண்ணுலாம் உன்கிட்டயே வந்து பேசுறாங்களே, எப்படி மச்சி உன்னால மட்டும் இதெல்லாம் முடியுது”
“டேய் முத்து தப்பா எதுவும் பேசாதடா, பிரபாதான் எனக்கு ஆறுதல் சொல்லி செஸ்ல பார்ட்டிசிபேட் பண்ண சொன்னாடா”
“இல்ல நான் ஜாலியாதான் பேசுனேன், நீ எதுவும் தப்பா எடுத்துக்காத. அந்த பொண்ணு நம்ம கிளஸ்ஸ்ல எங்க உக்காந்துருக்கும் ?” என்று முத்து கேட்டதும் பிரபாவின் இடத்தை காண்பித்தேன்.
“மச்சி அந்த பொண்ண நான் பாத்துருக்கேன், எப்பவுமே ரொம்ப அமைதியா இருக்கும்” என்றான் பாலா.
“அப்படியா, நான் பாத்தது இல்லயே மச்சி”
“அவ லைப்ரரிலதான் இருக்கா, அங்க போனா பாக்கலாம்” என்று சொல்லி முடிக்கவும் பிரபா வகுப்பறையில் நுழைவதற்கும் சரியாக இருந்தது.
“என்ன அசோக் லைப்ரரி வராம இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கே ?” என்று என்னிடம் கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாள்.
“என்கிட்ட முத்துவும் பாலாவும் பேசிக்கிட்டு இருந்தாங்க, அதான் மறந்தே போயிட்டேன். சாரி பிரபா”
“இட்ஸ் ஒகே அசோக்” என்று சிரித்தாள்.
“இவங்கதான் பிரபா” என்று கூறி இருவருக்கும் அறிமுகம் செய்துவைத்தேன்.
“அசோக் இப்பதான் உங்கள பத்தி சொன்னான்” என்றான் பாலா.
“அப்படி என்ன சொன்னான் ?” என்று குறும்புத்தனமாக கேட்டாள்.
“நீங்கதான் அட்வைஸ்லாம் பண்ணி ஈவண்ட்ல சேர சொன்னீங்கலாமே”
“ஓ… அதுவா” என்று சிரித்தாள்.
“பிரபா நாங்க அசோக்க தனியாவிட்டுட்டு போயிட்டோம்னு ரொம்ப ஃபீல் பண்ணோம். நல்லவேளை நீங்க வந்து பேசி புரியவச்சுட்டீங்க எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றான் முத்து.
“நான் ஃபிரண்ட்ஸுக்கு செய்ய வேண்டிய கடமையதான் செஞ்சேன், நீங்க எதுவும் ஃபீல் பண்ணாதீங்க. நான் அவன பாத்துக்குறேன்” என்று கூறி என்னை பார்த்து சிரித்தாள்.
“நல்லது பிரபா, எங்களுக்கு பஸ்ஸுக்கு நேரம் ஆச்சு. கிளம்புறோம்” என்று இருவரும் கூறினார்கள்.
“ஓகே மச்சி நீங்க கிளம்புங்க, நாளைக்கு பேசலாம்” என்றேன்.
உடனே இருவரும் எங்களை விடைப்பெற்று கிளம்பிச்சென்றனர். அவர்கள் சென்றதும் நான் பிரபாவிடம் பேச ஆரம்பித்தேன்.
“சாரி பிரபா, உங்கள இன்ட்ரொடியூஸ் பண்ணி வச்சதுல எதுவும் கோவம் இல்லயே ?”
“ப்ச்… என்ன அசோக் இப்படி கேக்குறே, அவங்களையும் நான் உன்னைய மாதிரி ஒரு நல்ல ஃப்ரெண்டாதான் பாக்குறேன். நான் எதுக்கு கோவப்படபோறேன்” என்று சலித்துக்கொண்டாள்.
“சாரி பிரபா, இனிமே அப்படி எதுவும் கேக்கவே மாட்டேன். ரொம்ப லேட் ஆச்சு வீட்டுக்கு போலாமா ?” என்றேன்.
“ஹ்ம்ம்… போலாம் அசோக்” என்றதும் இருவரும் வகுப்பறையைவிட்டு வெளியில் வந்தோம்.
“ஆமா நீங்க டெய்லி காலேஜுக்கு எப்படி வருவீங்க”
“பஸ்லதான் வருவேன்”
“ஓ… ஸ்கூட்டி எதுவும் வாங்கி வச்சுக்கலாம்ல”
“வீட்ல கேட்டேன், வாங்கி தரல. பஸ்லயே போயிட்டுவான்னு சொல்லிட்டாங்க”
இவள் வீட்டில் ஏதாவது பண கஷ்டமாக இருக்குமோ என்று எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
“அசோக் நீ டெய்லி பைக்லதானே வருவே ?”
“ஆமா பிரபா, உங்களுக்கு அதுவும் தெரியுமா ?”
“அதான் டெய்லி பாக்குறேன்ல தெரியாம இருக்குமா ?” என்று சிரித்தாள்.
“யெஸ், எனக்கு தெரியாமயே என்னைய நல்லா ஃபாலோ பண்ணிருக்கீங்க” என்று சிரித்தேன். அதற்கு அவளும் புன்னகைத்துவிட்டு பேசினாள்.
“சரி அசோக், என்னையும் உன்னோட பைக்லயே ட்ராப் பண்ணிடுறியா ?”
திடீரென்று பிரபா இப்படி கேட்டதும் எனக்கு பேசுவதற்கு வார்த்தை எழவில்லை. இதுவரை எந்த ஒரு பெண்ணையும் நான் பைக்கில் ஏற்றி சென்றதில்லை, ஒருவேளை அப்படி சென்றால் வீட்டில் என்ன சொல்வார்களோ என்கிற பயத்துடன் அமைதியாக இருந்தேன்.
“அசோக் ரொம்ப சீரியஸா எதுவும் திங் பண்ணாத, நான் உன்கிட்ட சும்மா ஃபன் பண்ணேன். எனக்கு பஸ்ல போறதுதான் பிடிக்கும். பை அசோக் நாளைக்கு பாக்கலாம்” என்று கூறி சிரித்துவிட்டு என்னிடம் இருந்து விடைப்பெற்றாள்.
நானும் பதிலுக்கு “பை பிரபா” என்று கூறிவிட்டு அவள் கல்லூரியின் கேட்டை கடந்து செல்லும் வரை கவனித்தேன்.
அதன் பிறகு என்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தேன்.
அப்போது வெளியில் ஒரு பஸ் வந்து நின்றது. அதில் பிரபா ஏறியதும் பஸ் கிளம்பியது.
பிரபா நம்முடைய பகுதியில் இருப்பவள். அதனால்தான் என்னுடன் பைக்கில் வரலாம் என்று ஆசைப்பட்டு கேட்டிருக்கிறாள். நான் என்ன சொல்வது என்று புரியாமல் விழித்ததால், விளையாட்டிற்கு கேட்டேன் என்று பொய் சொல்லிவிட்டு கிளம்பிச்சென்று விட்டாள்.
இதற்கு கூடிய விரைவில், நான் ஓரு நல்ல தீர்வை காண்பேன் என்ற நம்பிக்கையுடன் அவள் செல்லும் பேருந்தை பின்தொடர்ந்து பயணித்தேன்.
to be continue…..
உங்கள் ஆதரவை பொறுத்து மேலும் தொடருவேன்.

Author: hotking

6 thoughts on “என் மேல் விழுந்த மழைத்துளி! – 1

  1. Pingback:
  2. அட தாயோலி எல்லா கதைக்கும் அப்டேட்ஸ் பண்றா

Leave a Reply