என் மேல் விழுந்த மழைத்துளி! – 1

நீண்ட நேரம் நாங்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. அடுத்து என்ன செய்யலாமென்று அமைதியாக யோசித்துக்கொண்டிருந்தோம்.
பின்பு கோபி எழுந்து அவனது தந்தையிடம் தொலைபேசியில் பேசுவதற்கு சென்றான். அவரிடம் பேசிவிட்டு என்னிடம் வந்தான்.
“மச்சி நீ ஏதும் வொர்ரி பண்ணிக்காதடா, நான் என்னோட அப்பா கிட்ட பேசிட்டேன். எனக்கு எங்க வீட்டு பக்கத்துல இருக்குற காலேஜ்ல சீட் வாங்கிடலாம். அந்த காலேஜ் வச்சுருக்குறது அப்பாவோட ஃப்ரெண்ட்தான். அதனால நாளைக்கு அட்மிசன் அங்க போட்டுறலாம்னு சொல்லிடாங்கடா”
“எனக்கும் அங்க அட்மிசன் போட்டுறலாமா ?” என்று கேட்டேன்.
“டேய் லூசு மாதிரி எதுவும் பேசாத, இந்த காலேஜ்தான் உன்னோட படிப்புக்கு நல்லது. அதோட உனக்கு பக்கத்துல வேற இருக்குது. நீ இங்க தாண்டா படிக்கணும், உன்னோட லைப்கு இதுதான் பெஸ்ட்” என்று சொல்லி முடித்தான்.
“என்னதான் இருந்தாலும் நீ இல்லாம எப்படிடா நான் இருப்பேன். ஒருபக்கம் நீ இல்லாததை நினைச்சு வருத்தம். இன்னொரு பக்கம் பொண்ணுங்க கிட்ட எப்படி பேசபோறேன்னு வேற பயம். நான் என்ன பண்ண போறேன்னு எனக்கே புரியலைடா”
“அசோக் நம்ம லைப்ல எப்ப வேணாலும், என்ன வேணாலும் நடக்கலாம். நாம எல்லாத்தையும் எதிர்கொள்ள கத்துக்கணும், இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல. நீ முதல் நாள் கிளாஸ்க்கு போனா உனக்கு நிறையா புது ஃபிரண்ட்ஸ் கிடைப்பாங்க. அவங்களோட பேசு எல்லாம் சரியாகிடும். நாம வீக் எண்ட் சந்திக்கலாம், என்னதான் இப்படி நாம வேற காலேஜ்ல படிச்சாலும், நம்ம நட்பை யாராலும் பிரிக்க முடியாது. பிரிவுதான் நம்ம நட்ப இன்னும் பலமாக்கும்” என்று மூச்சு விடாமல் பேசி முடித்தான்.
“இவன் சொல்லுறதும் சரிதான். நம்ம வாழ்க்கை நம்ம கையிலதான் இருக்கு. எப்பவும் நாம தைரியமா இருக்கணும்” என்று மனதை தேற்றிக்கொண்டு கொஞ்சம் தெளிவடைந்தேன்.
“மச்சி இப்படியே இருக்காத வா உனக்கு அட்மிசன் போடலாம்” என்று கோபி என்னை அழைத்துச்சென்று அட்மிசன் போட்டான். அதன் பிறகு எப்போது கல்லூரி வரவேண்டும் என்று கேட்டோம்.
வரும் திங்கட்கிழமை வகுப்புகள் ஆரம்பம் ஆகிறது, சரியாக ஒன்பது மணிக்கெல்லாம் வகுப்பறையில் இருக்க வேண்டும் என அலுவலர் கூறினார்.
அதன்பின் இருவரும் வீட்டிற்கு கிளம்பினோம். வரும் வழியில் “காலேஜ் செல்வதற்கு இன்னும் மூன்று நாள்தான் இருக்கிறது” என்று யோசித்துக்கொண்டே கோபியிடம் பேசினேன்.
“மச்சான் நீ நாளைக்கு வேற காலேஜ்ல சேரப்போகும்போது, நானும் உன்னோட வரேண்டா”
“இல்ல மச்சி என்னோட அப்பா என்கூட வரேன்னு சொல்லிருக்காரு. அட்மிசன் முடிஞ்சதும் நானே உனக்கு போன் பண்றேன், நீ ரிலாக்சா இரு” என்று கூறினான்.
எனக்கு வேறு ஏதும் சொல்ல தோன்றவில்லை, சரிடா என்று சொல்லிவிட்டு அமைதியானேன்.
என்னுடைய வீடு வந்தது, நான் கிளம்புறேன்டா, அப்புறம் மீட் பண்ணலாம் என்று கோபி என்னை ட்ராப் செய்துவிட்டு கிளம்பினான்.
நான் கொஞ்சம் சோகமாக வீட்டினுள் நுழைந்தான்.
அம்மா என்னிடம் “ஏன்டா இப்படி மூஞ்சிய வச்சுட்டு வர என்னாச்சு ?” என்று விசாரித்தார்கள். நான் நடந்ததை கூறியதும் சற்று வருத்தம் அடைந்தார்கள்.
“அவனும் உன்னோட படிச்சா நல்லாத்தான் இருந்துருக்கும். ஆனா நீ கவலைப்படாத அசோக் எல்லாம் நல்லதுக்குதான் என்று என்னை தேற்றினார்கள்.
என்னுடைய முகம் கொஞ்சம் தெளிவானது, அதனால் பசிக்குது என்றேன்.
“போயி கைகால் கழுவிட்டு வா” என்றார்கள். நானும் கொஞ்சம் ஃபிரெஷ் ஆகிவிட்டு வந்து சாப்பிட்டேன்.
பின்பு என் அறைக்கு சென்று கட்டிலில் படுத்தேன்.
எனக்கு ஒரு புறம் கோபியின் பிரிவு கண்களின் முன்னால் வந்து நின்றது.
இன்னொரு புறம் பார்த்தால், கோவிலில் பார்த்த பெண்ணின் முகம் வந்து நின்றது. மீண்டும் அவளை காண்பேனா என்று யோசித்தேன்.
இரண்டையும் என்னால் மறக்க முடியவில்லை. அதனால் அப்படியே யோசித்துவிட்டு தூங்கிப்போனேன்.
மறுநாள், கோபியிடம் இருந்து மொபைலுக்கு அழைப்பு வந்தது, எடுத்து பேசினேன்.
“சொல்லூடா கோபி”
“மச்சி நான் இங்க காலேஜ்ல சேந்துட்டேன், எனக்கு இங்க ரொம்ப பிடிச்சுருக்கு, எனக்கும் திங்ககிழமைதான் கிளாஸ் ஆரம்பிக்கிறாங்க” என்று சந்தோசமாக கூறினான்.
“க்ரேட் மச்சி, ஆல் தி பெஸ்ட்டா” என்று சிறிது நேரம் கோபியோடு மகிழ்ச்சியுடன் பேசிவிட்டு போனை வைத்தேன்.
ஒரு பக்கம் சோகமாக இருந்தாலும், நண்பனுக்கு கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டதே என்று சந்தோஷமாக இருந்தது.
இப்படியே இரண்டு நாட்கள் கடந்தது, பள்ளியில் இருந்து சுற்றுலா சென்ற தம்பி சுரேஷ் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
“என்னடா டூர் போயிட்டு வந்துட்டியா” என்று அம்மா விசாரித்தாள். அவனும் சற்றுலா பற்றி விவரித்து கொண்டிருந்தான்.
அதன் பின் ஹாலில் உட்கார்ந்த என்னை பார்த்து “டேய் அண்ணா அட்மிசன் என்ன ஆச்சு ?” என்று கேட்டு தெரிந்துகொண்டான்.
இதுவரை நானும் தம்பியும் சண்டை இட்டதும் இல்லை, மகிழ்ச்சியாக பேசியதும் இல்லை. எதற்காக இப்படி இருக்கிறோம் என்று எங்களுக்கே புரியவில்லை. இருந்தாலும் கேட்கும் கேள்விகளுக்கு இருவரும் எப்போதும் சாதாரணமாகவே பதில் அளித்துக்கொள்வோம்.
“எனக்கு கொஞ்சம் தூக்கம் வருது நான் படுக்குறேன்” என்றான் சுரேஷ்.
டேய் ரெண்டு பேரும் வந்து சாப்பிடுங்கடா, அப்புறம் தூங்கலாம் என்று அம்மா கூறினார்கள். இருவரும் சாப்பிட்டுவிட்டு அவரவர் அறைகளுக்கு சென்றோம்.
நாளை முதல்நாள் கல்லூரிக்கு செல்லவேண்டுமே என்று ஒருவித மகிழ்ச்சியுடன் கூடிய பயத்தில் படுத்து நன்றாக உறங்கினான்.
அடுத்தநாள் காலை “டேய் அசோக் காலேஜ் போகணும்ல மணி ஆச்சு சீக்கிரம் கிளம்புடா” என்று அம்மா வந்து எழுப்பினார்கள்.
நான் அப்படியே திடுக்கிட்டு எழுந்தேன், அச்சசோ இப்படி தூங்கிவிட்டோமே என்று யோசித்தவாறு வேகமாக குளித்து, சாப்பிட்டுவிட்டு, கல்லூரிக்கு என்னுடைய பைக்கில் செல்ல தயாரானான்.
அப்போது தம்பி சுரேஷும் பள்ளிக்கு கிளம்பினான், அவனையும் பள்ளியில் டிராப் செய்துவிட்டு பதற்றத்துடன் கல்லூரிக்கு போய்ச் சேர்ந்தான்.
“முதல்நாளே இப்படி டென்ஷன் ஆகிருச்சே” என்ற பதற்றத்துடன் பைக்கை பார்க் செய்துவிட்டு என்னுடைய வகுப்பு எங்கே இருக்கிறது என்று கேட்டுகொண்டு வகுப்பறைக்கு சென்றேன்.
அங்கே வகுப்பில் எல்லா மாணவர்களும் வந்திருந்தனர். பேராசிரியரும் அனைவரின் முன்பாக நின்றவாறு பேசிகொண்டிருந்தார்.
நான் வகுப்பறையின் வாசலில் நின்றுகொண்டு, “மே ஐ கம் இன் சார்” என்று கேட்டேன்.
அனைவரும் என்னை திரும்பி பார்த்தனர். பேராசிரியரும் வாசலை பார்த்தார்.
முதல் நாளே தாமதமாக வருகிறானே என்று யோசித்தார். சரி எதுவும் திட்டவேண்டாம் என்று முடிவெடுத்து என்னை உள்ளே அழைத்தார்.
நான் உள்ளே சென்றேன். அங்கே ஆண்கள், பெண்கள் தனித்தனி வரிசையில் அமர்ந்திருந்தனர்.
எங்கே உட்காருவது என்று யோசித்தவாறு ஆண்கள் வரிசையில் முதல் பெஞ்சை பார்த்தான். இரண்டு பேர் உட்கார்ந்திருந்தனர். அந்த பெஞ்சின் ஓரத்தில் ஒரு இடம் காலியாக இருந்தது. அதனால் அங்கு சென்று அமர்ந்தேன்.
அது பெண்கள் வரிசைக்கு பக்கத்தில் இருக்கும் ஓராம் என்பது கொஞ்சம் தாமதமாகத்தான் என்னுடைய நினைவுக்கு வந்தது. இருந்தாலும் வேறு எந்த இடமும் காலியாக இல்லாத காரணத்தால் அந்த இடத்திலேயே அமர்ந்துக்கொண்டான்.
அப்போது பெண்கள் பகுதியில் இருந்து என்னை யாரோ பார்ப்பதை போல உணர்ந்தேன்.
யாராக இருக்கும் என்று பயந்தேன். ஆனாலும் மனதினை கொஞ்சம் தைரியப்படுத்திக்கொண்டு மெதுவாக திரும்பிபார்த்தேன்.
எனது இடது பக்கத்தில் உள்ள முதல் வரிசையின் ஓரத்தில் இருந்த பெண் என்னையே பார்த்துகொண்டிருந்தாள்.
நான் அவளது முகத்தை பார்த்ததும் அதிர்ந்தே போனேன்.
அவள் வேறு யாருமில்லை, என்னை கோவிலில் இடித்துவிட்டு கீழே விழுந்தாளே அந்த “பெண்” தான்.
நான் அவளை பார்த்ததும் முகத்தை வேறு பக்கமாக திருப்பிக்கொண்டாள், அதனால் நானும் அவளை பார்த்தவுடன் திரும்பிவிட்டேன்.
“ஐயோ ! இவ எப்படி இங்க வந்தா, கோவில்ல பாக்கும்போதே பயமா இருந்துச்சு, இப்ப என்னோட கிளாஸ்லயே படிக்க வந்துட்டா” என்று நடுங்கினேன்.
ஆனாலும் மீண்டும் அவளை பார்க்க முடியுமா என்று நினைத்து ஏங்கி கொண்டிருந்த என்னுடைய மனதிற்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது.
அப்போது பேராசிரியர், அனைவரையும் பார்த்து பேச ஆரம்பித்தார்.
“ஸ்டூடெண்ட்ஸ் நான்தான் உங்க கிளாஸ் பிரோபெஸர் சுந்தரமூர்த்தி. இந்த கிளாஸ்ல இருக்குற நிறை, குறைகள் மற்றும் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தா என்கிட்ட தாரளாமாக தெரிவிக்கலாம். இன்னக்கி தான் எல்லாரும் முதல் நாள் வந்துருக்கீங்க, அதனால ஒவ்வொருத்தரா முன்னால வந்து உங்களை அறிமுகம் செஞ்சுகோங்க” என்றார்.
முதலில் பெண்கள் பகுதியில் இருந்து அவள் எழுந்து சென்று முன்னால் நின்றாள். அவள் பெயர் என்னவென்று சொல்லபோகிறாள் என்ற ஆவலுடன் அவளையே பார்த்துகொண்டு இருந்தேன். அவளும் ஓரக்கண்ணால் என்னை நோட்டமிட்டவாரே அமைதியாக இருந்தாள்.
பேராசிரியர் “யெஸ் உன்ன பத்தி சொல்லுமா” என்றார்.
உடனே அவளும் பேச ஆரம்பித்தாள்.
ஹலோ ப்ரண்ட்ஸ், குட் மார்னிங், என்னோட பெயர் “தேன்மொழி” என்று கூறினாள்.
பெயருக்கு ஏற்றார் போல் அவள் பேசிய ஓவ்வொரு வார்த்தையும் தேன் போல என் காதில் பாய்ந்து கொண்டிருந்தது, அப்படி ஒரு இனிமை.
அவளை ரசித்து கொண்டிருந்ததால், அவளுடைய பெயர் மட்டுமே எனது காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துகொண்டிருந்தது. அதனால் அவள் பேசியது எதுவுமே எனக்கு கேட்கவில்லை.
பின்பு அவள் பேசி முடித்துவிட்டு வந்து உட்கார்ந்தாள்.
நான் அவளை பார்க்கும்போது பேராசிரியர் என்னை பார்த்துவிட்டால் என்ன செய்வது என்று யோசித்து அவளை மீண்டும் திரும்பி பார்க்காமல் விட்டுவிட்டேன்.
இப்படியே எல்லா பெண்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து தங்களை பற்றி சொல்லி கொண்டிருந்தனர். ஆனால் தேன்மொழியை தவிர எவரது முகமும் என்னை ஈர்க்கவில்லை.
அப்பொழுது, இவள்தான் எனக்காக பிறந்த தேவதையாக இருக்குமோ என்று மனதில் தோன்றியது.
அந்த நேரத்தில் பேராசிரியர் “யாருப்பா முதல் பெஞ்ச்ல இருக்குறது, உங்கள போயி அறிமுகம் செஞ்சுகோங்க”என்றார்.
திரும்பி பார்த்தேன் பெண்கள் வரிசை முடிந்தது. அதனால் அடுத்து நான்தான் பேசவேண்டும்.
ஒரு வேகத்தில் எழுந்து “நான்தான் சார்” என்று கொஞ்சம் தைரியத்துடன் முன்னே சென்று நின்றேன்.
பள்ளியில் சில பேச்சு போட்டிகளில் கூட்டத்தின் முன் நின்று பேசிய அனுபவம் இருந்தாலும், அங்கே பெண்கள் யாரும் இருந்ததில்லை. அதனால் இங்கே எப்படி பேசப்போகிறேன் என்கிற பயத்தால் என்னுடைய கைகால்கள் உதறியது.
தேன்மொழியை பார்த்தேன் அவள் நான் எப்போது என்னுடைய பெயரை சொல்லபோகிறேன் என்ற ஆவலோடு இருப்பது போல் எனக்கு தோன்றியது.
சரி பெண்கள் பக்கம் பார்த்தால்தானே பேசமுடியவில்லை, ஆண்கள் பக்கம் மட்டும் பார்த்து பேசி விடலாம் என்று முடிவுசெய்து பேச ஆரம்பித்தேன்.
“என் பெயர் அசோக். . .” என்று ஆரம்பித்து என்னை பற்றி சொல்லிமுடித்து, வேகமாக வந்து உட்கார்ந்துகொண்டேன். மறுபடியும் அவளை திரும்பி பார்க்கவில்லை.
இப்படியே அனைவரும் பேசிமுடித்தோம். இறுதியாக அந்த வகுப்பு முடிந்தது, அடுத்த வகுப்பு ஆசிரியர் வந்தார், நேராக பாடம் எடுக்க சென்று விட்டார். அதனை அனைவரும் கவனித்து கொண்டிருந்தோம், அதோடு மனதில் தேன்மொழியை எப்போது திரும்பி பார்ப்பது என்ற ஆவலும் இருந்தது.
தொடர்ந்து எல்லா வகுப்புகளும் பாடத்துடனே சென்றது. அதனால் என் அருகில் இருந்தவர்களுடனும் என்னால் பேச முடியவில்லை.
ஒருவழியாக உணவு இடைவேளை வந்தது. எனது பக்கத்தில் இருந்த இருவரை பற்றி விசாரித்தேன்.
தேன்மொழியை பற்றி நினைத்ததில் அவர்கள் பேசியதை நான் கவனிக்கவில்லை. அதனால் பெயரை கேட்டு தெரிந்துக்கொண்டேன். அவர்களும் நன்றாக பேசினார்கள்.
அதில் ஒருவன் பெயர் முத்து, இன்னொருவன் பெயர் பாலா. இருவரும் சிறுவயது முதல் நண்பர்கள் என்பதால் இப்போதும் ஒன்றாகவே சேர்ந்து படிக்கிறார்கள்.
அப்போது எனது நண்பன் கோபியின் நினைவு வந்தது. இருக்கட்டும் அவனுக்கு அந்த கல்லூரி நல்லாதான் இருக்கும் என்று என்னை நானே சமாதானப்படுத்திகொண்டேன்.
அவர்களிடம் “மதியம் லஞ்ச் எங்க சாப்பிட போறிங்க” என்று கேட்டேன். கேண்டீன் செல்ல வேண்டும் என்று இருவரும் கூறினார்கள்.
ஏன் என்று கேட்டதும், அவர்கள் இருவரும் தொலைவில் உள்ள கிராமத்தில் இருந்து
இரண்டு மணி நேரம் பயணம் செய்து வருவதால் வீட்டில் உணவு சமைப்பது கடினம். அதனால் காலையும், மதியமும் இங்கேயே சாப்பிடவேண்டும் என்று கூறினார்கள்.
என்னை கேட்டனர் நான் வீட்டில் இருந்து எடுத்து வந்துள்ளேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அந்த இனிமையான குரல் கேட்டது.
“ஹலோ அசோக்” என்று தேன்மொழிதான் என்னை அழைத்தாள்.
இவளே வந்து என்னை அழைக்கிறாளே என்ற ஒரு பயம் கலந்த சந்தோஷத்தில் திரும்ப முயன்றேன்.
அதற்குள் நாங்க கேண்டீன் செல்கிறோம் என்று முத்து, பாலா இருவரும் விடைப்பெற்றனர்.
அவர்களிடம் சரி என்று சொல்லிவிட்டு மெதுவாக திரும்பி அவளது முகத்தை பார்த்தேன்.

Author: hotking

6 thoughts on “என் மேல் விழுந்த மழைத்துளி! – 1

  1. Pingback:
  2. அட தாயோலி எல்லா கதைக்கும் அப்டேட்ஸ் பண்றா

Leave a Reply